Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

 'சிங்கப்பூர் உங்களை ஆதரிக்கிறது!' - தென்கிழக்காசிய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் பிரதமர் லீ

வாசிப்புநேரம் -

பிரதமர் லீ சியென் லூங்,  தென்கிழக்காசியப் போட்டிகளை வீட்டிலிருந்தே பார்த்துக் கொண்டிருப்பதாக அவருடைய சமூக ஊடகக் கணக்குகளில் பகிர்ந்திருக்கிறார். 

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து போட்டிகளில் கலந்துகொண்டுள்ள வீரர்கள் இதுவரை சிறந்த முறையில் வெற்றி பெற்று வருவதைப் பிரதமர் பாராட்டினார். 

குறிப்பாக, குவா சகோதரர்கள் இதுவரை நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூருக்கு 4 தங்கப் பதக்கங்களை வென்றிருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டிப் பாராட்டினார். 

சிங்கப்பூர் வீரர்களின்  படங்களையும் அவர்கள் வெற்றி பெற்றதைப் பற்றிய சில குறிப்புகளையும் பிரதமர்  இணைத்திருக்கிறார். 

"தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுங்கள்! சிங்கப்பூர் உங்கள் பின்னணியில் இருந்தவாறு ஆதரிக்கிறது!"

என்று வீரர்களுக்கு ஊக்கமளித்தார் பிரதமர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்