முக்கியமான நேரத்தில் வரும் பொதுத்தேர்தல் இது: பிரதமர் வோங்
வாசிப்புநேரம் -

பிரதமர் லாரன்ஸ் வோங் இது முக்கியமான நேரத்தில் வரும் பொதுத்தேர்தல் என்று கூறியிருக்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் பிரதமர், Facebook பக்கத்தில் தமது கருத்தைப் பதிவிட்டார்.
உலகம் பெரும் மாற்றங்களுக்கு ஆளாகிவரும் நேரம் இது என்று அவர் குறிப்பிட்டார்.
பல காலமாகச் சிங்கப்பூர் அடைந்து வந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உலக நிலவரம் இன்று மாறிவிட்டதாகத் திரு வோங் சொன்னார்.
எனவேதான் இந்த நேரத்தில் பொதுத்தேர்தலை நடத்த முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இது முக்கியமான தருணம் என்றார் அவர்.
நாட்டை முன்னெடுத்துச் செல்லும் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இது என்று அவர் சொன்னார்.
வரும் பொதுத்தேர்தலில் வாக்காளர்களின் அக்கறை அதிகரிக்கும் வாழ்க்கை செலவினம், வேலைகள், பணி நீக்கம் ஆகியவை குறித்து இருக்கும் என்று ஜனவரி மாதம் நடத்தப்பட்ட கருத்தாய்வு சொல்கிறது.
கோவிட்-19க்குப் பிறகு நடக்கும் தேர்தல் இது.
10 ஆண்டுக்குப் பிறகு தேர்தல் பிரசாரம் நேரடியாக நடைபெறவிருக்கிறது.

ஆதாரம் : CNA