பிரதமர் வோங் டிரம்ப்புக்கு வாழ்த்து
வாசிப்புநேரம் -
(படம்: Jim WATSON / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திரு டோனல்ட் டிரம்ப்புக்கு (Donald Trump) வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க - வடகொரிய மாநாடு சிங்கப்பூரில் நடந்தபோது திரு டிரம்ப் இங்கு வந்திருந்ததைத் திரு வோங் நினைவுகூர்ந்தார்.
திரு டிரம்ப்பின் முதல் தவணைக்காலத்தின்போது இருநாட்டு உறவை வலுப்படுத்துவதில் பல முன்னேற்றங்களை அடைந்ததாக அவர் சொன்னார்.
இந்த ஆண்டு (2024) அமெரிக்க-சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் 20 ஆண்டுகள் நிறைவுபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடன் அத்தகைய ஒப்பந்தம் செய்துள்ள ஒரே ஆசியான் நாடு சிங்கப்பூர் என்றும் அவர் சுட்டினார்.
துணையதிபர் JD வான்ஸுக்கும் (JD Vance) திரு வோங் வாழ்த்துத் தெரிவித்தார்.
திரு டிரம்ப் நிர்வாகத்துடன் அணுக்கமாகச் செயல்பட சிங்கப்பூர் தயார் என்றார் அவர்.