Skip to main content
பகுதி மின்கடத்தி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பகுதி மின்கடத்தி - "இந்தியா வளர்ச்சி அடைந்தால் சுற்றியுள்ள நாடுகளும் பலனடையலாம்"

வாசிப்புநேரம் -
பகுதி மின்கடத்தி - "இந்தியா வளர்ச்சி அடைந்தால் சுற்றியுள்ள நாடுகளும் பலனடையலாம்"

MDDI

வெளியீடு : 04 Sep 2025 09:58AM புதுப்பிப்பு : 04 Sep 2025 11:22AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவும் சிங்கப்பூரும் பகுதி மின்கடத்தித் துறையில் ஒத்துழைப்பது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற ஆண்டு (2024) தம்மிடம் பேசியதாகப் பிரதமர் லாரனஸ் வோங் சொன்னார்.

இரு நாடுகளும் 3 அம்சங்களின் தொடர்பில் இணக்கக் குறிப்புகளைக் கையெழுத்திட்டன.

பகுதி மின்கடத்தி சாதனங்களைப் பரிமாறித் தரத்தை நிலைப்படுத்துவது, குஜராத்தில் பயிற்சி நிலையத்தைத் திறந்து திறன் வளர்ச்சிக்குக் கைகொடுப்பது, ஆய்வு, புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது ஆகியவை அந்த 3 அம்சங்கள்.

திரு வோங் Hindustan Times நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் இந்த விவரங்களைப் பகிர்ந்தார்.

வளர்ந்துவரும் இந்தியா ஆசியாவின் நிலைத்தன்மை, மீள்திறன், வளர்ச்சி ஆகியவற்றுக்குக் கைகொடுக்கும் என்றார் திரு வோங்.

அது இந்தியாவில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள நாடுகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதனால் இந்தியா இந்தத் துறையில் வளர்ச்சியடைய சிங்கப்பூர் உதவுகிறது எனத் திரு வோங் குறிப்பிட்டார்.

திரு வோங் இந்தியாவுக்கு 3 நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்