இந்தியப் பயணம் அர்த்தமுள்ளதாக அமைந்தது: பிரதமர் வோங்
வாசிப்புநேரம் -
Instagram/Lawrence Wong
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அர்த்தமுள்ளதாக அமைந்ததாக Instagram தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணம் நேற்று முடிவடைந்தது.
அவர் கடந்த இரு நாள்களில் இந்தியத் தலைவர்களுடன் பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்துகொண்டதாகச் சொன்னார்.
நேற்று அவர் இந்தியாவின் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிராதான் (Dharmendra Pradhan), தேசியப் பாதுகாப்பு அமைச்சர் திரு அஜித் டோவல் (Ajit Doval) ஆகியோரைச் சந்தித்தார்.இரு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவத்தை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் பேச்சுவார்த்தை நடந்ததாக அவர் கூறினார்.
நேற்று அவர் இந்திய அதிபர் திரௌபதி முர்முவையும் சந்தித்தார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரும் ஆண்டுகளில் மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் திரு வோங் பதிவிட்டார்.
இந்தியாவில் தமக்கு வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்குத் திரு வோங் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
திரு மோடியையும் இந்திய அதிபர் முர்முவையும் சிங்கப்பூருக்கு வருகை புரியுமாறு அழைத்தார் திரு வோங்.

ஆதாரம் : Others