Skip to main content
தனிநபர் நடமாட்டச் சாதன மசோதா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தனிநபர் நடமாட்டச் சாதன மசோதா - மருத்துவச் சான்றிதழ் நிபந்தனை குறித்து அக்கறை

வாசிப்புநேரம் -
தனிநபர் நடமாட்டச் சாதன மசோதா - மருத்துவச் சான்றிதழ் நிபந்தனை குறித்து அக்கறை
(கோப்புப் படம்: CNA/Wallace Woon)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோர் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என்ற நிபந்தனை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை தெரிவித்திருக்கின்றனர்.

முன்வைக்கப்பட்ட மசோதாவின் கீழ் அந்த நிபந்தனை உள்ளது.

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான சட்டங்களில் செய்யப்படவிருக்கும் மாற்றங்கள் குறித்துச் சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை தெரிவித்தனர்.

புதிய சட்டம் ஜூன் மாதம் முதல் தேதி நடப்பிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனங்களின் வேக வரம்பை மணிக்கு 6 கிலோமீட்டராகக் குறைப்பதைப் பற்றியும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

தற்போது வரம்பு மணிக்கு 10 கிலோமீட்டராக உள்ளது.

சாதனம் நடப்பதற்கு மாற்றாக இருந்தாலும் சிலர் உச்சவேகத்தில் செல்வதாகப் போக்குவரத்துத் துணையமைச்சர் பே யாம் கெங் (Baey Yam Keng) கூறினார்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்