மின்சிகரெட் இறக்குமதி - ஆடவருக்கு 3 ஆண்டுச் சிறை, 5 பிரம்படி
வாசிப்புநேரம் -
படம்: Health Sciences Authority, Singapore
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
எட்டோமிடேட் (etomidate) ரசாயனம் கலந்த மின்சிகரெட் இறக்குமதி தொடர்பில் 39 வயது ஆடவருக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனையும் 5 பிரம்படிகளும் விதிகப்பட்டுள்ளன.
பிங் சுவீ ஷெங் (Png Swee Sheng) என்ற அந்நபர் பிப்ரவரி 6ஆம் தேதி, உட்லண்ஸ் சோதனைச் சாவடி வழியாகச் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றார்.
அவரது வாடகைக் காரை நிறுத்திக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர்
காரின் பின்புறத்தில், சலவைத் தூள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றில் இரண்டு மின்சிகரெட்டுகளும் 210 கலன்களும் இருந்தன.
பிங் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரது சிறுநீர் மாதிரிகளில் எட்டோமிடேட் இருப்பது கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 208 மின்சிகரெட் கலன்களில் எட்டோமிடேட் ரசாயனம் கலந்திருப்பதை ஆணையம் உறுதிப்படுத்தியது.
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளுக்கு அனுமதி இல்லை என்பதை அறிந்திருந்தும் பணம் தேவைப்பட்டதால் பிங் அவற்றை எடுத்துவர ஒப்புக்கொண்டார்.
மின்சிகரெட்டை இறக்குமதி செய்தால் 500 முதல் 800 வெள்ளி வரை கிடைக்கும் என்று பிங்கிற்கு அறிமுகமானவர் தெரிவித்தார்.
எட்டோமிடேட் ரசாயனம் கலந்த மின்சிகரெட்டுகளை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்த குற்றத்திற்காக போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் (MDA) தண்டிக்கப்படும் முதல் நபர் பிங் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆதாரம் : CNA