"காவல்துறையின் சீருடைக்குப் பின்னால் ஒரு கதை - தியாகம், கடமை, கொள்கை"
Facebook/Lawrence Wong
பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong), சமூகத்தைப் பாதுகாக்கும் காவல்துறையினருக்கு நன்றி கூறியிருக்கிறார்.
காவல்துறை தினத்தை முன்னிட்டு பிரதமர் தமது Facebook பக்கத்தில் வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டார்.
காவல்துறையினர் தினமும் முன்னிலையில் இருப்பதாகக் கூறிய திரு வோங் அவர்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டுச் சமூகத்தைப் பார்த்துக்கொள்வதாகச் சொன்னார்.
நேரத்தைச் செலவிட்டுச் சேவையாற்றும் தொண்டூழியர்களுக்கும் பிரதமர் நன்றி சொன்னார்.
சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அனைவரும் பகிர்ந்துகொள்ளும் ஒரு கடமை.
அதைச் சாத்தியமாக்குவது அவர்களது அர்ப்பணிப்பு என்று சிங்கப்பூர்க் காவல்துறை Facebookஇல் பதிவிட்டது.
ஒவ்வொரு சீருடைக்குப் பின்னாலும் ஒரு கதை உண்டு - தியாகம், கடமை, கொள்கை.
பலர் குடும்பத்துக்கான நேரத்தைக் கைவிட்டு, துறையில் பல்லாண்டுகள் சேவையாற்றுவதைக் காவல்துறை சுட்டியது.