பணத்துக்காக சிம் அட்டை வழங்கிய சந்தேகத்தில் 13 பேர் கைது
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
போலியாகப் பதிவு செய்யப்பட்ட postpaid சிம் அட்டைகளைப் பணத்துக்காக வழங்கியதாகக் கூறப்படும் 13 பேரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 11 பேர் ஆண்கள், இருவர் பெண்கள்.
அவர்கள் 19 வயதுக்கும் 31 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஜூலை 20 முதல் 24ஆம் தேதி வரை நீதிமன்றத்தில் அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்படும்.
பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு சிம் அட்டைக்கும் 10 முதல் 30 வெள்ளி வரை பணம் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் தங்கள் பெயரில் பல சிம் அட்டைகளைப் பதிவுசெய்து அவற்றைக் குற்றக் கும்பலிடம் ஒப்படைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெவ்வேறு கடைகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் சிம் அட்டைகளை வாங்கி அவற்றைக் கும்பலில் சேர்பவர்களிடம் ஒப்படைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
போலியாகப் பதிவுசெய்யப்பட்ட சிம் அட்டைகளைக் குற்றச் செயல்களுக்கு உதவும் வகையில் மற்றவர்களுக்கு வழங்குவது குற்றம்.
அதற்கு அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதம், மூவாண்டுச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi