மோட்டார் சைக்கிள் திருட்டு - 25 வயது ஆடவர் கைது
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: CNA/Jeremy Long)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மோட்டார் சைக்கிளைத் திருடிய சந்தேகத்தில் 25 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
நேற்று முன்தினம் (அக்டோபர் 1) மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாகக் காவல்துறைக்குப் புகார் வந்தது.
அந்த மோட்டார் சைக்கிள் ஃபெர்ன்வேல் ஸ்ட்ரீட் (Fernvale Street) பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
சாவி வாகனத்திலேயே இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
விரிவான விசாரணைக்குப் பின் காவல்துறை சந்தேக நபரை அடையாளம் கண்டது.
புகார் கிடைத்த மறுநாள், ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அந்த ஆடவரிடம் செல்லுபடியான ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
நாளை அவர் மீது குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

ஆதாரம் : Mediacorp Seithi