மோட்டார் வாகனத் திருட்டுச் சந்தேகம் - இருவர் கைது

(படம்: Envato Elements)
மோட்டார் வாகனத் திருட்டில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தில் 2 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 29, 30 வயதுடையவர்கள் என்று காவல்துறை கூறியது.
இம்மாதம் (பிப்ரவரி) 12ஆம் தேதி இரவு 7.30மணியளவில், சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஜாலான் சுல்தான் (Jalan Sultan) பகுதியில் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் இருந்த தமது கார்களில் ஒன்று திருடப்பட்டதாகப்
பாதிக்கப்பட்டவர் சொன்னார்.
தொடர் விசாரணைகளின் மூலம், இருவரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டு நேற்று (14 பிப்ரவரி) அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருடப்பட்ட வாகனம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.
ஆடவர்கள் இருவர் மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் அதிகபட்சம் 7 ஆண்டுச் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.