Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் $8 மில்லியன் மோசடிச் சம்பவங்கள்... 248 பேரிடம் விசாரணை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 248 பேர் விசாரிக்கப்படுகின்றனர்.

ஜூலை 18 முதல் ஜூலை 31 வரை காவல்துறை அதிகாரிகள் மோசடிக்கு எதிராகத் தீவின் பல பகுதிகளில் நடவடிக்கை எடுத்தனர்.

மொத்தம் 102 பெண்களும் 146 ஆண்களும் விசாரிக்கப்படுகின்றனர்.

அவர்கள் 17 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அனவைரும் விசாரணையில் ஒத்துழைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் சிலர் முதலீடு, வேலை, வர்த்தகம் உள்ளிட்டவை தொடர்பாக 680க்கும் அதிகமான மோசடிகளைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

மற்றவர்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய சந்தேகத்தில் பிடிபட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 8.2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. .

மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்