Skip to main content
Lucky Plazaவில் பெண் மீது தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Lucky Plazaவில் பெண் மீது தாக்குதல் - காவல்துறை விசாரணை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லக்கி பிளாஸா (Lucky Plaza) கடைத்தொகுதியில் ஓர் ஆடவர் ஒரு பெண்ணை உதைத்துத் தாக்கிய சம்பவத்தை விசாரிப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன் தொடர்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை CNA-இடம் கூறியது.

அந்தச் சம்பவத்தின் காணொளிகள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டன.

ஓர் ஆடவர் ஒரு பெண்ணை உதைத்துக் கீழே தள்ளிவிடுவது காணொளியில் தெரிகிறது.

பெண்ணை மீண்டும் உதைக்க முயன்றபோது ஆடவர் விழுந்தார்.

வழிபோக்கர்கள் அவரைப் பிடித்து வைத்தனர்.

சம்பவம் பற்றி அறிந்திருப்பதாக சிங்கப்பூரில் உள்ள பிலிப்பீன்ஸ் தூதரகம் கூறியது.

பிலிப்பீன்ஸைச் சேர்ந்த ஒரு பெண் ஆடவர் ஒருவரால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சம்பவம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அது சொன்னது.

அந்தப் பெண்ணுக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்