Skip to main content
மேகன் குங் விவகாரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மேகன் குங் விவகாரம் - "காவல்துறையினர் சந்தித்த நெருக்குதலும் கையாண்ட விதமும் தவறுகளில் முடிந்தது"

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மேகன் குங் (Megan Khung) துன்புறுத்தல் விவகாரத்தைக் காவல்துறையினர் கையாண்ட விதம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

4 வயதுச் சிறுமியின் துன்புறுத்தல் விவகாரத்தைக் கையாண்ட அதிகாரிகள் இருவரும் நெருக்குதலைச் சந்தித்திருந்தனர்.

அவர்கள் துன்புறுத்தல் விவகாரங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை; அதனால் ஏற்பட்ட விளைவுகள் துயரத்துக்கு வித்திட்டன என்று உள்துறைத் துணையமைச்சர் கோ பெய் மிங் (Goh Pei Ming) சொன்னார்.

2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் மாண்ட சிறுமி தம்முடைய தாயார், தாயாரின் காதலன் ஆகியோரால் சித்திரவதை செய்யப்பட்டார்.

சிறுமியின் பாட்டி ஏற்கெனவே ஜனவரி மாதம் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்.

அப்போது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி விவகாரம் மீது தகுந்த கவனம் செலுத்தவில்லை.

சிறுமியின் தாயாரைத் தொடர்புகொள்ளமுடியவில்லை என்பதால் அதிகாரி மேல்நடவடிக்கை எடுக்கவில்லை.

பாட்டியும் சிறுமியின் தந்தையும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இன்னொரு புகார் கொடுத்தனர்.

அதன் பிறகே சிறுமியின் மரணம் குறித்துத் தெரியவந்தது என்றும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்றும் திரு கோ சொன்னார்.

காவல்துறையினர் நடந்ததைப் பாடமாக எடுத்துக்கொண்டு இனி நடைமுறைகளை வலுப்படுத்துவார்கள் என்று அவர் கூறினார்.

"காவல்துறையினருக்கு உயிர்களைப் பாதுகாக்கும் பெரிய பொறுப்பு உள்ளது. அதற்கான தேவைகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. நெருக்குதல் ஏற்படும்போது தவறுகள் நேரலாம்," என்று திரு கோ சொன்னார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்