செங்காங் நடைபாதைக்குள் காரை ஓட்டிய மர்ம நபர்
வாசிப்புநேரம் -
படம்: Facebook/SGRV
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
செங்காங் வட்டாரத்தில் ஓட்டுநர் ஒருவர் காரை நடைபாதையில் ஓட்டிவிட்டு, அதை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியிருக்கிறார்.
ஓட்டுநரைத் தேடுவதாகச் சிங்கப்பூர்க் காவல்துறை கூறியது.
வெள்ளை நிற BMW கார் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்ததை ஒருவர் காணொளியாக எடுத்து Facebook தளத்தில் நேற்று (ஜூன் 13) பதிவிட்டார்.
சம்பவம் குறித்து நேற்று முன்தினமே (ஜூன் 12) தகவல் கிடைத்ததாகக் காவல்துறை 8world ஊடகத்திடம் கூறியது.
ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து வழிதவறி காரை நடைபாதைக்குள் ஓட்டினார் என்று நம்புவதாகக் காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரும் முன்னரே ஓட்டுநர் தப்பிவிட்டார்.
யாருக்கும் காயமில்லை. விசாரணை நடக்கிறது.

ஆதாரம் : Others/8world