சமயம் பற்றி அவதூறு பேசியதாக 27 வயது ஆடவர் மீது நாளை குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
படம்: SPF
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஒருவருடைய சமயத்தைப் பற்றி அவதூறாய்ப் பேசியதாக 27 வயது ஆடவர் மீது நாளை குற்றச்சாட்டு கொண்டுவரப்படவிருக்கிறது.
காணொளிபற்றி மார்ச் முதல் தேதி தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் காவல்துறை கூறியது.
இஸ்லாமியச் சமூகத்தை அவமதிக்கும் வகையில் அவர் காணொளியைப் பதிவிட்டதாகத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை விவரித்தது.
தங்ளின் காவல் நிலைய அதிகாரிகள் அவரை அடையாளம் கண்டனர். ஆனால் பிடிபடுவதற்கு முன்பே அவர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் சென்றுவிட்டார்.
மலேசியக் காவல்துறையின் உதவியுடன் ஆடவர் கைதுசெய்யப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார்.
அவர் இன்று காலை சிங்கப்பூரில் தரையிறங்கினார். உடனே சிங்கப்பூர்க் காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டுவரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இவ்வாண்டு நடந்த வேறொரு சம்பவம் குறித்த விசாரணையில் ஆடவர் உதவுவதாகக் காவல்துறை தெரிவித்தது.
மார்ச்சில் இஸ்லாமியச் சமய நூலை அவமதிக்கும் காணொளியொன்றை நீக்கக் காவல்துறை உத்தரவு பிறப்பித்தது. அந்தச் சம்பவம் பொதுப்பேருந்தில் நடந்ததாகக் காவல்துறை நம்புகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi