Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஊழல் தொடர்பான குற்றங்களில் பிடிபட்ட உயர் அதிகாரிகளைப் பற்றித் தெரியுமா?

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் S. ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

7 ஆண்டில் நண்பர்கள் என்று அவர் சொன்ன 2 தொழிலதிபர்களிடமிருந்து ஈஸ்வரன் சுமார் 403,300 வெள்ளி மதிப்பிலான பரிசுகளைப் பெற்றார்.

62 வயது ஈஸ்வரன் மொத்தம் 35 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

அவற்றில் 5 குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரில் இதற்கு முன் ஊழல் தொடர்பான குற்றங்களில் பிடிபட்ட உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகளின் தகவல்களைச் சேகரித்தது 'செய்தி'..

வீ டூன் பூன் (Wee Toon Boon)

⚖️ 1975ஆம் ஆண்டில் பிடிபட்டார்.

⚖️ அப்போது அவர் சுற்றுப்புறத் துணையமைச்சர் பொறுப்பில் இருந்தார்.

⚖️ 800,000 வெள்ளிக்கும் மேற்பட்ட ஊழலின் தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

⚖️ அவர் குற்றாவளியென நிரூபிக்கப்பட்டார்.

⚖️ அவருக்கு நாலரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

⚖️ மேல்முறையீடு செய்தபோது அவர் குற்றவாளி எனும் தீர்ப்பில் மாற்றம் செய்யப்படவில்லை.

⚖️ ஆனால் தண்டனை ஒன்றரை ஆண்டுக்குக் குறைக்கப்பட்டது.

தே சியாங் வான் (Teh Cheang Wan)

⚖️ 1986ஆம் ஆண்டில் பிடிபட்டார்.

⚖️ அப்போது அவர் தேசிய வளர்ச்சி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

⚖️ 2 தனியார் நிறுவனங்களிடமிருந்து
1 மில்லியன் வெள்ளி வரை லஞ்சமாகப் பெற்றதன் சந்தேகத்தில் அவர் விசாரிக்கப்பட்டார்.

⚖️ அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனியார் மேம்பாட்டுப் பணிகளுக்காக வாங்கித் தக்கவைத்துக்கொள்ள உதவியதற்காக அந்தப் பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டது.

⚖️ ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படுவதற்கு முன்பு அவர் அதே ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

⚖️ தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அப்போதைய பிரதமர் லீ குவான் யூவிற்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.

⚖️ அதில் செய்த தவற்றுக்கு வருந்துவதாகவும் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் தே தெரிவித்திருந்தார்.

சொய் ஹொன் டிம் (Choy Hon Tim)

⚖️ 1994ஆம் ஆண்டில் பிடிபட்டார்.

⚖️ பொதுப் பயனீட்டுக் கழகத்தின் செயல்பாடுகளுக்கான துணைத் தலைமை நிர்வாகியாக இருந்தார்.

⚖️ அவர் லஞ்சமாகச் சுமார் 13.85 மில்லியன் வெள்ளியைப் பெற்றிருக்கக்கூடும் எனும் சந்தேகத்தில் விசாரிக்கப்பட்டார்.

⚖️ அவருக்கு 14 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

⚖️ சொய் பெற்ற லஞ்சத் தொகை சிங்கப்பூர் வரலாற்றில் ஆக அதிகம்.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்