அரசியல்வாதிகளின் சம்பள மறுஆய்வுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன
வாசிப்புநேரம் -
அரசியல் பதவியில் இருப்பவர்களின் சம்பளத்தை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுயேச்சைக் குழு அதன் பணியை முடித்துவிட்டது.
இருப்பினும், மத்திய கிழக்குப் பூசலால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு அக்குழுவின் பரிந்துரைகளை ஆலோசிப்பதைத் தள்ளிவைக்க சிங்கப்பூர் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் (Alex Yam) எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அதனைத் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட அரசியல் சம்பள கட்டமைப்பை மறுஆய்வு செய்ய இவ்வாண்டு ஜனவரியில் சுயச்சைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழு தனது ஆய்வை முடித்து கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.
பொருத்தமான நேரத்தில் குழுவின் அறிக்கையையும் அதற்கான பதிலையும் அரசாங்கம் வெளியிடும் என்று அமைச்சர் சான் தெரிவித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi