Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் அரசியல் அண்மைப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு நிரந்தர மாற்றம் கண்டுள்ளது: மூத்த அமைச்சர் தர்மன்

சிங்கப்பூரில் அண்மைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம்  நிரந்தரமாக மாறியுள்ளதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் அரசியல் அண்மைப் பொதுத்தேர்தலுக்குப் பிறகு நிரந்தர மாற்றம் கண்டுள்ளது: மூத்த அமைச்சர் தர்மன்

கோப்புப் படம்: Gaya Chandramohan

சிங்கப்பூரில் அண்மைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் நிரந்தரமாக மாறியுள்ளதாக மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் சிங்கப்பூருக்கு நன்மை அளித்துள்ளதாய்த் திரு. தர்மன் தமது Facebook பதிவில் கூறினார்.

மக்கள் செயல் கட்சிக்கும் தேர்தல் முடிவுகள் நன்மை அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இரண்டு அம்சங்களின் அடிப்படையில் தாம் அவ்வாறு கூறுவதாகத் திரு. தர்மன் சொன்னார்.

முதலில் மக்கள் செயல் கட்சி வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது. அரசாங்கத்தை நடத்தவும், நாட்டிற்கு நன்மையளிக்கும் செயல்களைச் செய்யவும் சிங்கப்பூரர்கள் கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கையை அது பிரதிபலிக்கிறது. இரண்டாவதாக எதிர்த்தரப்பினருக்குக் கிடைத்துள்ள கூடுதல் வாக்குகள், மக்கள் செயல் கட்சி அதன் செயல்முறைகளை மறுஆய்வு செய்ய வித்திட்டுள்ளது. வாக்காளர்களின் இதயங்களை வெல்ல அது முக்கியம் 

என்றார் திரு. தர்மன்.

தேர்தல் முடிவுகள் எதிர்த்தரப்பினருக்கும் நன்மையளிக்கும் விதமாகவே அமைந்துள்ளன. எதிர்த்தரப்பினர் ஒட்டுமொத்தமாகக் கூடுதல் வாக்குகள் பெற்றதை மட்டும் தாம் குறிப்பிடவில்லை என்றார் திரு. தர்மன்.

பாட்டாளிக் கட்சியின் பிரசார உத்தி நன்றாக இருந்தது

என்று கூறிய அவர், ஒருவரை மட்டுமே முன்னிலைப் படுத்தும் பிரசாரப் போக்கிலிருந்து அந்தக் கட்சி விலகியதைச் சுட்டினார்.

அதேநேரத்தில் எதிர்த்தரப்பினர் களமிறக்கிய வேட்பாளர்கள் மக்களின் பார்வையில் நம்பிக்கைக்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர்.

அண்மைப் பொதுத் தேர்தல் முடிவுகள் அரசியலில் புதிய நிலைத்தன்மையைச் சிங்கப்பூரர்கள் விரும்புவதைப் பிரதிபலிப்பதாகத் திரு. தர்மன் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்