வெயிலிலிருந்து காக்க உதவும் மகரந்தம்
NTU Singapore
This audio is generated by an AI tool.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு, மகரந்தத்தை அடிப்படையாகக் கொண்டு Sunscreen எனப்படும் வெயில் தடுப்புத் திரவத்தை உருவாக்கியிருக்கிறது.
மகரந்தத்தைக் கொண்டு வெயில் தடுப்புத் திரவம் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை.
சூரியனின் தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிலிருந்து பாதுகாப்புத் தரவும்
சருமத்தின் வெப்பநிலையை 5 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் திரவம் உதவும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வெயில் தடுப்புத் திரவம் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதுகாப்பானது.
காமெலியா (Camellia) மலர்களின் மகரந்தத்தைக் கொண்டு திரவம் தயாரிக்கப்படுகிறது.
திரவத்தைச் சருமத்தில் தடவிய பிறகு சுட்டெரிக்கும் வெயிலில் 20 நிமிடங்கள் வரை அது பாதுகாப்பு அளிக்கும்.
வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வெயில் தடுப்புத் திரவங்கள் 6 நாளுக்குள் கடலில் வாழும் பவளங்களைப் பாதிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் மகரந்தத்தால் செய்யப்படும் திரவத்தில் பவளங்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.