'செய்தி'யின் பொங்கலோ பொங்கல் 2025 ஒன்றுகூடல் - உற்சாகமாகக் கலந்துகொள்ள வந்திருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்

தமிழர் திருநாளாம் பொங்கலின் சிறப்பை மாணவர்களுக்கு எடுத்துக்கூற 'செய்தி' நிகழ்வின் மூலம் வாய்ப்பளிக்கிறது.
ஆண்டுதோறும் இணையம்வழி நடத்தப்பட்டுவரும் இப்போட்டிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் தொடர்ந்து ஆதரவு வழங்கிவருகின்றனர்.
அவர்களின் ஆதரவுக்கு நன்றி கூறும் விதமாக முதல்முறையாக இன்று "பொங்கலோ பொங்கல் 2025 ஒன்றுகூடல்" நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி காலை 9 மணிக்கு மீடியாகார்ப் வளாகத்தில் தொடங்கியது.
நிகழ்வில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் காத்திருக்கின்றன.
