இன்று பொங்கல் ஒளியூட்டு
நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் (LISHA) ஏற்பாட்டில் நாளை (11 ஜனவரி) முதல் பொங்கலுக்காகப் பல்வேறு நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (12 ஜனவரி) 'மண் வாசனை' என்ற நிகழ்ச்சியும் செவ்வாய்க்கிழமை (14 ஜனவரி) சிறப்பு கலாசார நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
அடுத்த சனிக்கிழமை (18 ஜனவரி) 'பொங்கல் திருவிழா' என்ற நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேல் விவரங்கள்: https://pongal.sg/