Skip to main content
'செய்தி'யின் பொங்கலோ பொங்கல் 2025 ஒன்றுகூடல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'செய்தி'யின் பொங்கலோ பொங்கல் 2025 ஒன்றுகூடல் - பொங்கல் விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்த மாணவர்கள்

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் நிறுவனத்தின் செய்திப் பிரிவு, பொங்கல் திருநாளையொட்டி 8ஆவது ஆண்டாகப் “பொங்கலோ பொங்கல் 2025” போட்டியை நடத்தியது.

போட்டியில் 70க்கும் அதிகமான பள்ளிகள் பங்கேற்றன. பள்ளிகள் சுமார் 600 படைப்புகளை அனுப்பி வைத்தன.

மாணவர்களின் தமிழ் ஆர்வத்தையும் புத்தாக்கச் சிந்தனையையும் தூண்டும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக 'செய்தி' இன்று "பொங்கலோ பொங்கல் 2025" என்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்தியது.

நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என சுமார் 30 பேர் கலந்துகொண்டனர்.

Jigsaw Puzzle எனும் பொங்கல் தொடர்பான படங்களை இணைப்பது, படங்கள் வரைந்து பொங்கல் சொற்றொடரைக் கண்டுபிடிப்பது, சொல் விளையாட்டு, ரங்கோலிக் கோலம் போடுவது போன்ற அங்கங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று மகிழ்ந்தனர்.

இணையம்வழி போட்டியில் பங்கேற்றுவந்த மாணவர்களுக்கு 'செய்தி' ஏற்பாடு செய்த இந்த ஒன்றுகூடல் புதுவித அனுபவத்தைத் தந்தது.

ஆசிரியர்களையும் மாணவர்களையும் நேரில் சந்தித்து அவர்களோடு கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள 'செய்தி'க்கு இது ஒரு சிறந்த தளமாகவும் அமைந்தது.

சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களில் சில:
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்