'செய்தி'யின் பொங்கலோ பொங்கல் 2025 ஒன்றுகூடல் - உற்சாகமாகப் பங்கேற்கும் ஆசிரியர்கள், மாணவர்கள்
வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் நிறுவனத்தின் செய்திப் பிரிவு, பொங்கல் திருநாளையொட்டி 8ஆவது ஆண்டாகப் “பொங்கலோ பொங்கல் 2025” போட்டியை நடத்தியது.
போட்டியில் 70க்கும் அதிகமான பள்ளிகள் பங்கேற்றன. பள்ளிகள் சுமார் 600 படைப்புகளை அனுப்பி வைத்தன.
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தையும் புத்தாக்கச் சிந்தனையையும் தூண்டும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக 'செய்தி' இன்று "பொங்கலோ பொங்கல் 2025" என்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்துகிறது.
நிகழ்ச்சியில் சுமார் 30 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
அனைவரும் பாரம்பரிய உடைகளை உடுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுகளில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
ரங்கோலி கோலம் போடுவது, பொங்கலுடன் சம்பந்தப்பட்ட சொற்களைச் சொல்வது, வரைந்த படத்துடன் தொடர்புடைய சொல்லைச் சரியாக சொல்வது ஆகிய நடவடிக்கைகளில் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
இணையம்வழி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு 'செய்தி' ஏற்பாடு செய்த இந்த ஒன்றுகூடல் புதிய அனுபவமாக இருந்தது.

ஆதாரம் : Mediacorp Seithi