Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் என்ன சொல்கிறது?

வாசிப்புநேரம் -

'பொன்னியின் செல்வன்'

இந்த மாபெரும் வரலாற்றுப் புதினம் திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்பதே பலருக்குப் பரவசமூட்டியது. 

இறுதியில்...

திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியீடு கண்டிருக்கிறது. 

பேராவலுடன் இருந்த சிங்கப்பூர் ரசிகர்கள் பலர் முன்பதிவு செய்து இன்று காலை திரையரங்குக்கு விரைந்தனர். 

அவர்களைச் சந்தித்தனர் 'செய்தி' நிருபர்கள். 

ரசிகர்களிடையே பொதுவில் ஓர் உற்சாக உணர்வும் எதிர்பார்ப்பும் தென்பட்டன. 

பீச் ரோட்டில் உள்ள Carnival Cinemas-இல் முதல் காட்சி இன்று காலை 6.30 மணிக்குத் திரையிடப்பட்டது. 

அது கிட்டத்தட்ட 85% நிறைந்திருந்ததாய்த் திரையரங்கு சொன்னது. 

கிட்டத்தட்ட 840 இருக்கைகள் கொண்ட திரையரங்கில் இன்று இரவுக் காட்சிக்கும் கிட்டத்தட்ட 85 விழுக்காடு முன்பதிவாகிவிட்டதாக அது சொன்னது. 

(அய்னுன்னிசா, மெலிசா)

திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தோரிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவின. 

'செய்தி' சந்தித்த பலர் நாவலை ஏற்கனவே படித்தவர்கள். 

அவர்களில் சிலர் கதாபாத்திரங்களை திரையில் உருவகப்படுத்திப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறினர். 

(அய்னுன்னிசா, மெலிசா)

சிலர் திரைப்படம் நாவலைப் போன்று தமிழர் வரலாற்றை எடுத்துரைக்காமல் அழகுக்கும் நவீனத்துக்கும் தொழில்நுட்பத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாய்க் கூறினர். 

மணிரத்னம் இயக்கத்தில் A.R. ரஹ்மான் இசையமைப்பில் வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்தியத் திரையுலகின் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். 

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்