சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
கையிலே கலைவண்ணம் கண்டால்... சிவக்கும் கரம், மலரும் முகம்... இது மருதாணியின் கதை

படம்: SELVI'S
'கரத்தின் அழகு முகத்தில் தெரியும்' - மருதாணிக்கு இது பொருந்தும்.
ஆறில் இருந்து 60 வயது வரை, மருதாணியை வேண்டாம் எனச் சொல்லும் பெண்கள் குறைவு...
தீபாவளியையொட்டி தேக்காவிலும் மருதாணி போடும் சேவைக்கான தேவை சூடுபிடித்துள்ளது.
அதைப் பற்றி 'செய்தி' மேலும் கண்டறிந்தது...
இந்த ஆண்டு தீபாவளிக்கு மக்கள் விரும்பிக் கேட்கும் மருதாணி வடிவங்கள் என்ன?
இந்திய, அரபு, மேற்கத்திய வடிவங்களுக்கு இடையில் தற்போது மண்டலா வடிவம் (Mandala) மக்களிடம் குறிப்பாக, இளம்பெண்களிடம் பிரபலமடைந்துவருவதாக மருதாணிக் கலை நிபுணர்கள் கூறினர்.
உள்ளங்கையில் மையப் புள்ளியைச் சுற்றி வட்டமாக வரையப்படுவதுதான் இந்த மண்டலா வடிவம்.
திடீர் வகை மருதாணியிலிருந்து வரும் மணத்தை அவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை என்று கடை உரிமையாளர் செல்வி கூறினார்.
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் மருதாணியை விரும்புகின்றனர்...
பழங்குடியினர், தேள், கடல்நாகம் ஆகிய வடிவங்களில் ஆண்கள் மருதாணி இட்டுக்கொள்வதாகக் கலை நிபுணர்கள் சிலர் கூறினர்.
சிறு பிள்ளைகளும் மருதாணி இட்டுக்கொள்வதில் பேரானந்தம் அடைகின்றனர்.

இதர வகை மருதாணி வடிவங்கள்:


