Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் விற்பனையான கணவாய், இறால் உருண்டைகளில் பன்றியின் மரபணுக்கள் - NUS ஆய்வுத் தகவல்

சிங்கப்பூரில் விற்கப்படும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கணவாய், இறால் உருண்டைகளில் பன்றியின் மரபணுக்கள் இருந்ததாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் விற்கப்படும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கணவாய், இறால் உருண்டைகளில் பன்றியின் மரபணுக்கள் இருந்ததாக சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறையின்கீழ் அந்த ஆய்வு நடத்தப்பட்டு, அக்டோபர் 31ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டது.

உணவுப் பொருள் எந்த வணிக நிறுவனத்துடையது என்னும் விவரத்தைப் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை.

நிறுவனத்தின் 5 உணவு மாதிரிகள் வெவ்வேறு கால இடைவெளியில் வாங்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன.

சிங்கப்பூர் போன்ற பல்லின சமய மக்கள் வாழும் இடங்களில் உணவு நிறுவனங்கள், உணவுத் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

பன்றியின் மரபணுக்கள் உள்ளதாகக் கூறப்பட்ட உணவு வகைகளில் ஹலால் சான்றிதழ் பெற்ற முத்திரை ஏதும் பதிக்கப்பட்டிருக்கவில்லை.

இருப்பினும், அதிகமான அளவில் பதப்படுத்தப்பட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட உயிரினங்களில் இருந்து உருவாக்கப்படும் உணவுப் பொருள்களை சீரான இடைவெளியில் சோதிக்க வேண்டியதன் அவசியத்தை, இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்