Skip to main content
சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பம் - விளம்பர மோசடியில் $400,000 இழப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பம் -  விளம்பர மோசடியில் $400,000 இழப்பு

(படம்: Singapore police force, Immigration & checkpoints authority)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 26 Sep 2026 11:53AM புதுப்பிப்பு : 26 Sep 2026 01:25PM

சிங்கப்பூர் நிரந்தரவாசத்துக்கான விண்ணப்பச் சேவை மோசடியில் சுமார் 400,000 வெள்ளி இழப்பு ஏறபட்டுள்ளது.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் காவல்துறையும் வெளியிட்ட கூட்டறிக்கையில் விவரம் வெளியானது.

பொதுவாகச் சமூக ஊடகம் வழியே மோசடி  நடத்தப்படுகிறது.

சிங்கப்பூர் நிரந்தரவாசத்துக்கான விண்ணப்பச் சேவை வழங்குவதாகக் கூறும் போலி விளம்பரங்கள் இடம்பெறும்.

அதை நம்பும் பொதுமக்கள் விளம்பரப் பதிவை அழுத்துவார்கள்.

முகவர் அமைப்பைப் போல் காணப்படும் போலி இணையப்பக்கத்தில் அவர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை அளித்துவிடுகின்றனர்.

200 வெள்ளி முதல் 90,000 வெள்ளி வரை கட்டணத்தையும் செலுத்துகின்றனர்.

பிறகு ஆணையத்தின் பெயரையும் சின்னத்தையும் வைத்து பொதுமக்களுக்குப் போலி மின்னஞ்சல் அனுப்பப்படும்.

ஆணையத்திடம் அது குறித்து சரிபார்க்கும்போது, பொதுமக்கள் மோசடியில் சிக்கியதை உணர்வதாக அதிகாரிகள் கூறினர்.

இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து போலி மின்னஞ்சல் தொடர்பில் 31 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஆணையத்திடம் நேரடியாக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்