Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'முதல் நியமனம்... முதல் வெற்றி... நம்பமுடியவில்லை' - சிறந்த துணை நடிகை விருதை வென்ற யுவினா

வாசிப்புநேரம் -
பிரதான விழா 2022இல் யுவினா மாலதி ராம் சலனம் நாடகத் தொடருக்காகச் சிறந்த துணை நடிகை விருதை வென்றிருக்கிறார்.

எதிர்பார்ப்புகள், கதாபாத்திரம், கற்றுக்கொண்டவை ஆகியவற்றை 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார் யுவினா...

விருது பெறுவேன் என்ற எதிர்பார்ப்பு இருந்ததா?

"30 விழுக்காடு நம்பிக்கை இருந்தது. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தபோது நிறையச் சிரமங்களை எதிர்நோக்கினேன். நிறைய முயற்சி செய்திருந்தேன். ஆனால் என்னுடன் நியமனம் செய்யப்பட்ட மற்ற நடிகைகளும் திறமைசாலிகள். அதனால் வெற்றி பெறுவேன் என 30 விழுக்காடு நம்பிக்கை இருந்தது."
 

மனத்தில் முதலில் தோன்றியது?

"நம்ப முடியவில்லை. ஆச்சரியம். அதிர்ச்சி. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடன் அதே விருதுக்கு நியமனம் செய்யப்பட்டவர் சக்தி. அவருக்குத் தான் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் என் பெயர் சொன்னவுடன்... இப்போது வரை உண்மையிலேயே நான் தான் வென்றேனா என்பது போல் தோன்றுகிறது.

இது என் 11 ஆண்டு உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்."

நற்செய்தியை முதலில் இவரிடம் பகிர வேண்டும்...

"முதலில் என் மகளிடம் தான் வெற்றிபெற்ற நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். என் மகளும் என்னுடன் அரங்கில் தான் இருந்தார். 11 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கின்றேன். இதுவே எனது முதல் நியமனம். முதல்முதலாக நியமிக்கப்பட்டு வென்றது இன்னும் பெருமையாக இருக்கின்றது."

ஷாந்தா கதாபாத்திரம் பற்றி...

"ஷாந்தா கதாபாத்திரத்தில் 65 விழுக்காடு தான் நான். ஷாந்தா அனுபவித்த நிகழ்வுகள் என் வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றன. அதனால் ஷாந்தாவுடன் என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் ஷாந்தா."

ஷாந்தா கற்றுக்கொடுத்தது...

"என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஷாந்தா ஊக்குவித்துள்ளார். பொதுவாகப் பிறர் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கத்தால் நான் என் அனுபவங்களை அதிகம் பகிர்ந்துகொள்வதில்லை. ஆனால் சலனம் நாடகத் தொடரில், ஷாந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். அதன் மூலம் பிறர் பயனடைவார்கள். நிஜ வாழ்க்கையிலும் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அது பிறருக்குத் தைரியம் கொடுக்கலாம், ஊக்குவிக்கலாம் என்பதை உணர்ந்தேன்."

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்