சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"பாடகி சித்ராவிடமிருந்து விருது கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி" - உள்ளூர்க் கலைஞர் விஷ்ணு பாலாஜி
வாசிப்புநேரம் -
Instagram/vishnusinger
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி சித்ராவிடமிருந்து விருது பெற்ற உணர்வை வார்த்தைகளால் வருணிக்க இயலாது என்றார் உள்ளூர்ப் பாடகர் விஷ்ணு பாலாஜி.
மீடியாகார்ப் அரங்கில் நடைபெற்ற பிரதான விழாவில் அவருக்குச் சிறந்த பாடகருக்கான விருது வழங்கப்பட்டது.
அவரிடம் பேசியது 'செய்தி'.
"அந்த உணர்வே தனி"
சிறு வயதிலிருந்து தமது கண்ணுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த இந்தியப் பின்னணி பாடகி சித்ராவிடமிருந்து விருது பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்று விஷ்ணு தெரிவித்தார்.
"இசைக் கல்வி வாழ்நாள் முழுதும் நீடிக்கும்"
"இசை ஒரு தனி உலகம். அதில் முழுத் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று ஒருபோதும் சொல்ல இயலாது. இசைக் கல்வி வாழ்நாள் முழுதும் நீடிக்கும். அந்த எண்ணம்தான் எனக்குத் தொடர்ந்து உற்சாகம் அளிக்கிறது," என்று விஷ்ணு சொன்னார்.
"இளம் இசைக் கலைஞர்களே.."
"கலையில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் முடிந்தவரை அது குறித்து அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். அறிவைத் தேடு, உயர்வை நாடு!" என்று அவர் 'செய்தி'யிடம் சொன்னார்.
விஷ்ணு பாடல் வரிகளைக் கொண்டு அவரது வாழ்க்கை அனுபவங்களைச் சுருக்கமாகச், சுவையாகச், சுவாரசியமாக வருணித்துள்ளார்....
இதோ அவற்றைக் காண்போம்!
உங்கள் இசைப் பயணம்.....
"கனவுக்குச் செயல் கொடுத்தால் அந்த சூாியனில் செடி முளைக்கும்"
சவால்களைச் சந்திக்கும்போது....
"மனிதா உன் மனதைக் கீறி விதைபோடு மரமாகும்"
பாடகி சித்ராவிடமிருந்து விருது வாங்கியபோது...
"நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..நான்தான் மயங்குறேன்"
எனது ரசிகர்களுக்காக....
"நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை"