Skip to main content
பிரதான விழாவில் ஒரே நாடகத் தொடருக்கு 5 விருதுகள்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிரதான விழாவில் ஒரே நாடகத் தொடருக்கு 5 விருதுகள்...

வாசிப்புநேரம் -
பிரதான விழாவில் ஒரே நாடகத் தொடருக்கு 5 விருதுகள்...
வெளியீடு : 07 Feb 2026 11:32PM புதுப்பிப்பு : 08 Feb 2026 09:34AM

மீடியாகார்ப்பின் பிரதான விழாவில் 'கருவனம்' என்ற திகில் நாடகத் தொடர் 5 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லன் கதாபாத்திரம், சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் (Most Promising Artiste) ஆகிய விருதுகள் அதற்குக் கிடைத்துள்ளன.

சிறந்த நடிகர் - விக்னேஷ் வரதராஜன்

சிறந்த துணை நடிகர் -கார்த்திகேயன் சோமசுந்தரம்

சிறந்த துணை நடிகை- காயத்திரி சேகரன்

சிறந்த வில்லன் கதாபாத்திரம் - உதய சௌந்தரி

சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் - நவ்யா முத்துக்கிருஷ்ணன்

Storybots Asia நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'கருவனம்' இரட்டைச் சகோதரிகளின் கதையைச் சித்திரிக்கிறது.

மாண்ட தாயாரின் பூர்வீக வீட்டில் வாழத் தொடங்கும் அவர்கள் அசாதாரண நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது தொடரின் கதை.

தொடரைக் காண: https://www.youtube.com/watch?v=CV5XIAAFVyU&list=PLgvSxx961Tt7SdLuWqgcW21rwWDULg5dj

உள்ளூர் இந்திய ஊடகத்துறையில் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் பிரதான விழாவில் இன்று 19 விருதுகள் வழங்கப்பட்டன.

அவற்றுள் மிகப் பிரபல ஆண், பெண் நட்சத்திரங்களுக்கு வாக்களிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மிகப் பிரபலமான ஆண் நட்சத்திர விருது குருவுக்கும்
மிகப் பிரபலமான பெண் நட்சத்திர விருது நிஷா குமாருக்கும் வழங்கப்பட்டன.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்