Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரதான விழா முதற்சுற்றுப் பரிசளிப்பு - சிறந்த வானொலிப் படைப்பாளர், சிறந்த நடிகை யார்யார்?

வாசிப்புநேரம் -
பிரதான விழா முதற்சுற்றுப் பரிசளிப்பு - சிறந்த வானொலிப் படைப்பாளர், சிறந்த நடிகை யார்யார்?

(படம்: Instagram/ Vasantham)

இவ்வாண்டின் பிரதான விழாவின் முதற்சுற்றுப் பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று (23 நவம்பர்) சிறப்பாக நடந்தேறியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் போக்குவரத்து அமைச்சர் 
S ஈஸ்வரன் கலந்துகொண்டார்.

ஊடகத் துறைக்குக் கணிசமாகப் பணியாற்றிய திரு. வி. பாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.

அவர் கடந்த 40 வருடங்களாகக் கலை, மரபுடைமைத் துறையில் பல்வேறு திட்டங்களில் பங்காற்றியிருக்கிறார்.

சிறந்த வானொலி படைப்பாளர் விருது: ஒலி 96.8இன் ஹலீமா அஸ்மான் (Haleema Asman)

சிறந்த வானொலி நிகழ்ச்சிக்கான விருது: ஊக்கமளிக்கும் பெண்களைப் பறைசாற்றும் 'சிங்கப்பெண்ணே'

சிறிய நாடகத் தொடரில்...

சிறந்த நடிகைக்கான விருது: இந்திரா சந்திரன் 
சிறந்த நடிகருக்கான விருது: ராகதீபன்

பிரதான விழாவின் முதற்சுற்றுப் பரிசளிப்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் 3ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு meWATCH தளத்திலும் வசந்தம் ஒளிவழியிலும் ஒளிபரப்பப்படும்.

இரண்டாவது நிகழ்ச்சியில் மேலும் 21 விருதுகள் வழங்கப்படும்.

அதன் முன்னோட்ட அங்கமும், விருது நிகழ்ச்சியும்  அடுத்த மாதம் 10ஆம் தேதி நேரடியாக இரவு 7.30 மணி மணிக்கும் 9 மணிக்கும் ஒளிபரப்பப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்