Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"வாழ்நாள் சாதனையாளர் விருது எனது கலைப் பயணத்தில் கிடைத்த ஓர் அங்கீகாரம்" - L. விஜயந்திரன்

வாசிப்புநேரம் -
ஆடல்... பாடல்... படைப்பு...

அனைத்திலும் சகலகலா வல்லவன்....

கண்கவர் ஆடைகளை உடுத்தித் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கிறார் பிரபல உள்ளூர்க் கலைஞர் L. விஜயந்திரன்.

நேற்று (24 பிப்ரவரி) மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழியின் பிரதான விழா நிகழ்ச்சியில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அவரிடம் பேசியது 'செய்தி'.

"கலைப் பயணத்தில் கிடைத்த ஓர் அங்கீகாரம்"

"வாழ்நாள் சாதனையாளர் விருது எனது கலைப் பயணத்தில் கிடைத்த ஓர் சிறந்த அங்கீகாரம். அந்த விருதின் மதிப்பை உணர்கிறேன்," என்றார் திரு விஜயந்திரன்.

"எம். எஸ். விஸ்வநாதன் முன் பாடியதில் பெருமை"

தமது கலைப் பயணத்தில் தனித்து நிற்கும் பல தருணங்கள் இருப்பதாகத் திரு L. விஜயந்திரன் நினைவுகூர்ந்தார்.

அவற்றுள் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் முன் பாடியதில் பெருமிதம் கொள்வதாக அவர் 'செய்தி'யிடம் சொன்னார்.

"இளம் இசைக் கலைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது...."

வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடிப்படையில் சங்கீதம் அல்லது ஓர் இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்வது நல்லது என்றார் திரு L. விஜயந்திரன்.

"இசையைக் கற்றுக்கொண்டால் படைப்பாற்றல் மேம்படும்; கலாசாரம் வளரும்; சிங்கைக் கலையின் தரம் உயரும்," என்று அவர் கூறினார்.

"எனது கலைப் பயணம் தொடரும்"

தமக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் திரு L. விஜயந்திரன் நன்றி தெரிவித்தார்.

"மக்களின் கைதட்டல்தான் எனக்கு உற்சாகம் அளித்தது. அவர்களின் ஆதரவின்றி நான் இவ்வளவு ஆண்டுகாலமாக நிலைத்திருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து ஆடுவேன், பாடுவேன், மக்களை மகிழ்விப்பேன். எனது கலைப் பயணம் தொடரும்," என்று அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்