சிங்கப்பூர் exclusive
"கலைக்கு இன்னும் நிறையச் செய்யவேண்டும்" - பிரதான விழாவில் சிறந்த நம்பிக்கை நட்சத்திர நியமனங்கள்
வாசிப்புநேரம் -
(படம்: Mediacorp)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மீடியாகார்ப் பிரதான விழா விருது நிகழ்ச்சி 20ஆம் முறையாக நாளை மறுநாள் (15 பிப்ரவரி) நடைபெறுகிறது.
சிங்கப்பூர் இந்திய ஊடகத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்தப் பிரிவுகளில் ஒன்று சிறந்த நம்பிக்கை நட்சத்திரம்.
மொத்தம் 5 பேர் அந்தப் பிரிவில் நியமனம் பெற்றுள்ளனர்.
அவர்களில் தே. ஷோ. கைஸ்வர்யா, சுந்தர் நாகையா, பவானி ஆகிய மூவரிடம் 'செய்தி' பேசியது.
நடிப்பது முதல் முறை
தொலைக்காட்சி நாடகத்தில் முதல் முறையாக நடிப்பது நல்ல கற்றல் அனுபவமாக அமைந்திருந்தாலும் பல சவால்கள் இருந்ததாக இருவர் பகிர்ந்துகொண்டனர்.
"என்னுடைய கதாபாத்திரத்தில் உணர்வுகளைத் தீவிரமாகக் காட்ட வேண்டும். நான் நடித்த நாடகத்தின் கதைக்களம் கற்பனை கலந்த உலகில் அமைந்திருக்கும். அதற்கேற்ப நடிக்க வேண்டியிருந்தது" என்று 'Oh Butterfly' நாடகத்தில் நடித்த கைஸ்வர்யா குறிப்பிட்டார்.
"திரைக்குப் பின்னால் வேலை செய்துதான் பழக்கம். நாடகத்தில் வரிகளைப் பேசச் சிரமமாக இருந்தது. சக நடிகர்கள் நடிக்கும்போது அதற்கேற்ப உணர்வுகளைக் காட்ட கடினமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்தை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்றார் 'வான் வருவான்' நாடகத் தொடரில் நடித்த சுந்தர்.
தயாரிப்புக் குழுவினர் பொறுமையுடன் சொல்லிக்கொடுத்தது உதவியதாக அவர்கள் கூறினர்.
சமூக ஊடகம் கைக்கொடுத்தது
'விலங்கு' நாடகத் தொடரில் நடித்த பவானி சமூக ஊடகத்தில் உள்ளடக்கங்களை உருவாக்கி வருகிறார்.
அது நாடகத்தில் நடிக்க அவரைத் தயார் செய்ததாகச் சொன்னார்.
"சமுக ஊடகத்தில் பல வகையான கதாபாத்திரங்களை நடித்துப் பார்க்க முடிந்தது. குறிப்பாக எதிர்மறையான கதாபாத்திரங்கள். இணையவாசிகள் உடனடியாகக் கருத்துகளைத் தெரிவிப்பர்.
அதன் மூலம் நடிப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது" என்றார் பவானி.
கலைத் துறைக்கு இன்னும் நிறையச் செய்யவேண்டும்
கலைத்துறையில் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம்.
பரதநாட்டியக் கலைஞரான கைஸ்வர்யா பாரம்பரியக் கதைகளையும் கலைகளையும் கொண்டாடும் படைப்புகளில் ஓர் அங்கமாக இடம்பெற எண்ணுவதாகக் குறிப்பிட்டார்.
நடிப்பிலும் சமூக ஊடகத்திலும் பெற்ற அனுபவத்தை வைத்து உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்குப் பல்வேறு உள்ளடக்கங்களை உருவாக்குவது தமது இலக்கு என்றார் பவானி.
இயக்குநராகப் பணிபுரிந்த சுந்தர் கலையில் எல்லாவற்றிலும் சிறிது கற்றுக்கொள்வது நல்லது என்றார் அவர்.
எதிர்காலத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தும் படைப்புகளை உருவாக்குவது அவருடைய இலக்கு.