Skip to main content
பிரதான விழா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிரதான விழா - மிகப் பிரபலமான நட்சத்திர விருதை வென்ற நிஷா குமார், குரு!

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப்பின் பிரதான விழாவில் நிஷா குமார் , குரு ஆகியோர் மிகப் பிரபலமான நட்சத்திரங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ரசிகர்களிடம் நடத்தப்பட்ட இரண்டு வார வாக்கெடுப்பில் மிகப் பிரபலமான ஆண், பெண் நட்சத்திரங்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

மிகப் பிரபலமான நட்சத்திர விருதுகள் உட்படப் பிரதான விழாவில் இன்று (7 பிப்ரவரி)19 விருதுகள் வழங்கப்பட்டன.

தொலைக்காட்சி, ஒலி, மின்னிலக்க உள்ளடக்கம் ஆகியவற்றில் சாதனை படைத்தோரை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் இதோ...

சிறந்த நாடகத் தொடர் - பிதாமகன் (Mediacorp Eaglevision )

சிறந்த தகவல் நிகழ்ச்சி- எங்க பேட்டை S2 (The Media)

சிறந்த கதம்ப நிகழ்ச்சி - பிரதான விழா 2025 (Mediacorp Eaglevision )

சிறந்த இணையக் குறு நிகழ்ச்சி - திகில் டேல்ஸ் S3 (Organized Mayhem)

சிறந்த வானொலி நிகழ்ச்சி - சிங்கப்பெண்ணே S5

சிறந்த பாடல் உருவாக்கம் - 'விண்ணைத் தொடு' (பிரதான விழா 2025)

சிறந்த நடிகர் - விக்னேஷ் வரதராஜன்

சிறந்த நடிகை - ஈஸ்வரி குணசேகர்

சிறந்த துணை நடிகர் - கார்த்திகேயன் சோமசுந்தரம்

சிறந்த துணை நடிகை- காயத்திரி சேகரன்

சிறந்த நம்பிக்கை நட்சத்திரம் - நவ்யா முத்துக்கிருஷ்ணன்

சிறந்த வில்லன் கதாபாத்திரம் - உதய சௌந்தரி

சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிப் படைப்பாளர் - சரவணன் அய்யாவு

சிறந்த தகவல் நிகழ்ச்சிப் படைப்பாளர் - கார்த்திகேயன் சோமசுந்தரம்

சிறந்த பாடகர் - ஸ்தெஃபன் ஸக்காரியா

சிறந்த வானொலிப் படைப்பாளர் - நித்யா

வாழ்நாள் சாதனையாளர் - பவளகாந்தம் அழகர்சாமி

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்