Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

பிராட்டா - காற்பந்து என்ன தொடர்பு? 'kosong'தான்!

வாசிப்புநேரம் -

பிரபல காற்பந்து அணிகள்  பொருதும் ஆட்டத்துக்குப் பின் சமூக ஊடகங்களில் ரொட்டி பிராட்டாவின் படங்கள் பரவலாவதைப் பார்த்திருப்போம்...

சிங்கப்பூரில் அண்மை ஆண்டுகளில் அந்தப் போக்கு அதிகரித்திருக்கிறது.

Kosong என்பது மலாய்ச் சொல். Kosong என்றால் ஒன்றுமில்லை என்று பொருள். முட்டையோ, வெங்காயமோ வேறு எதுவுமோ சேர்க்காத பிராட்டாவை 'kosong Prata' என்பர். 

குறிப்பாக ஓர் அணி எந்த கோலும் போடாமல் ஆட்டத்தை முடித்தால் 'kosong' பிராட்டா அதாவது சாதாரண பிராட்டா ரொட்டிக்கான தேவை அதிகரிக்கும்.

பிராட்டா ரொட்டிக்கும் காற்பந்துக்கும் என்னதான் தொடர்பு?

"உதாரணத்துக்கு ஆட்ட முடிவு 2-0 என்றால் ரசிகர்கள் பலர் அதை '2 kosong' என்று சொல்வதுண்டு.  சாதாரணமாக 2 ரொட்டி வாங்குபவர்கள் அவ்வாறு கேட்பதுண்டு," என்றார் Casuarina Curry மெக்பர்சன் (mcpherson) கிளையின் இயக்குநர் கீர்த்தி ராஜேந்திரன்.

ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியின் சட்டையை அணியும் வாடிக்கையாளர்கள் சிலர் ஆட்ட முடிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் சாதாரணமான பிராட்டாக்களை வாங்குவார்கள். 

Facebook/Saffrons

ஆட்டத்துக்குப் பின் ரொட்டி ஏன்?

English Premier League, Champion's League போன்ற பெரிய போட்டிகள் என்று வரும்போது அந்தப் போக்கு தென்படுகிறது. 

"உதாரணத்துக்கு Liverpool, Manchester United அணிகளிடையே அதிகப் போட்டி இருக்கும். 

இரு அணிகளும் விளையாடும் ஆட்டத்தில் ஓர் அணி எந்த கோலையும் போடவில்லை என்றால் அந்த அணியைக் கேலி செய்யும் வகையில் வெற்றி பெற்ற அணியின்  ரசிகர்கள் பிராட்டாவைச் சாப்பிடுவார்கள்," என்றார் காற்பந்து ரசிகரான விநோத்.

AFP

அந்தப் போக்கு பிராட்டா  கடைக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

"இந்தப் போக்கை யார் தொடங்கினார்கள் என்று தெரியாது. ஆனால் அவர் ஒரு புத்திசாலி. அது விற்பனைக்கு உதவுகிறது," என்று வேடிக்கையாகச் சொன்னார் Saffrons கடையின் விற்பனை இயக்குநர் ரிட்ஜல் நூர்.

இலவச பிராட்டா

2019ஆம் ஆண்டு Champions League அரை இறுதிச் சுற்றில் Liverpool அணி 4க்கு 0 என்ற கோல் எண்ணிக்கையில் Barcelona அணியை வென்றது. 

அதைக் கொண்டாட Liverpool அணியின் சட்டையை அணிந்த வாடிக்கையாளர்களுக்கு 4 சாதாரண பிராட்டாவை அளித்தது Springleaf Prata Place.

"நான் Everton அணியின் தீவிர ரசிகராக இருந்தாலும் Liverpool-இன் வெற்றியை அங்கீகரிக்கவேண்டும் என்று எண்ணி இலவச பிராட்டா அளிக்கத் திடீர் முடிவெடுத்தேன். அது அந்த அளவிற்குப் பேசப்படும் என்று எதிர்பார்க்கவில்லை," என்றார் கடையின்
நிறுவனரான குணாளன்.

அப்போது Casuarina Curry உணவகமும் இலவச பிராட்டாவை அளித்தது.

உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் எப்படி?

AP Photo/Darko Bandic, File

இரு உணவகங்களும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் கொண்டாட்ட உணர்வில் கலந்துகொள்ளத் திட்டமிடுகின்றன. அவை இலவசப் பிராட்டாவை வழங்கலாம்...

"ஆட்டத்தில் ஓர் அணி கோல் போடாமல் இருந்தால்தான் இது சாத்தியமாகும்..பார்க்காலம்," என்றார் குணாளன்.

"நாங்கள் பிரேசில் அணியின் தீவிர ரசிகர்கள். ஆட்டங்கள் எப்படி நடக்கின்றன என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்," என்றார் Casuarina Curryஇன் கீர்த்தி.

காற்பந்து விளையாட்டுகள் குழுக்களுக்கு இடையில் அல்ல... நாடுகளுக்கு இடையே தான் ஆனால்...

ரசிகர்களைப் பொறுத்தவரை  காற்பந்தைக் கொண்டாடும்போது மகிழ்ச்சி... அதை பிராட்டாவுடன் சேர்த்துக் கொண்டாடும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி !

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்