Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"எதற்கும் தளராத மனம், எதையும் சமாளிக்கும் திடம்" -பிரதான விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாலகிருஷ்ணன்

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழி உள்ளூர்க் கலைஞர்களைக் கௌரவிக்க நடத்தும் பிரதான விழாவின் முதற்சுற்றுப் பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று (23 நவம்பர்) சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாண்டு பிரதான விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றவர்....

திரு வி.பாலகிருஷ்ணன்...
Instagram
40 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர்க் கலைத்துறையில் பெரும்பங்கு வகித்துவருபவர்.

ஒரு கலைஞராகப் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கைதூக்கிவிட்டவர்.

கலைக்கும் பாரம்பரிய நடனத்துக்கும் சேவையாற்றிய பெருமை அவரைச் சேரும்.

உள்ளூர்ப் பிரபலங்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்.

'செய்தி'-இடம் பேசிய அவர்,

"வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றதில் பெருமை கொள்கிறேன். இது எதிர்பாரா விருது, " என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமது தளராத மனப்பான்மை குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

"எதற்கும் தளராத மனம் எனக்கு உண்டு. எப்படியாவது வேலையைச் செய்து முடித்துவிடவேண்டும் எனும் மன உறுதியுடன் செயல்படுவேன். எந்தச் சவாலையும் சமாளிக்கத் தயங்கமாட்டேன்," என்றார் திரு பாலகிருஷ்ணன்.

விருது வழங்கிய மீடியாகார்ப் நிறுவனத்திற்கும், தமக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த சில முக்கியமானவர்களுக்கும் திரு பாலகிருஷ்ணன் தமது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

பிரதான விழாவின் முதற்சுற்றுப் பரிசளிப்பு நிகழ்ச்சி அடுத்த மாதம் 3ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு meWATCH தளத்திலும் வசந்தம் ஒளிவழியிலும் ஒளிபரப்பப்படும்.

இரண்டாவது நிகழ்ச்சியில் மேலும் 21 விருதுகள் வழங்கப்படும்.

அதன் முன்னோட்ட அங்கமும் விருது நிகழ்ச்சியும் அடுத்த மாதம் 10ஆம் தேதி நேரடியாக இரவு 7.30 மணி மணிக்கும் 9 மணிக்கும் ஒளிபரப்பப்படும்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa