பாலர்பள்ளிச் சிறார் மானபங்கம் - மறைத்த பள்ளித் தலைவர்களுக்குச் சிறை
This audio is generated by an AI tool.
பாலர் பள்ளியொன்றின் முன்னாள் துணைத் தலைமையாசிரியருக்கும், முன்னாள் நிர்வாக இயக்குநருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலர்பள்ளி சமையல்காரர் சிறாரை மானபங்கம் செய்ததை அவர்கள் இருவரும் மறைத்ததற்காக அந்தத் தண்டனை.
குழந்தை பாலியல் துன்புறுத்தலைப் புகார் செய்யத் தவறிய அந்த இரு பெண்களும் நம்பிக்கை துரோகம் செய்ததாக நீதிபதி தெரிவித்தார்.
- 59 வயது முன்னாள் நிர்வாக இயக்குநர் - 4 மாதச் சிறை
- 49 வயது முன்னாள் துணை தலைமையாசிரியர் - 3 மாதம், 2 வாரச் சிறை
அந்தச் சம்பவம் 2023ஆம் ஆண்டு நடந்தது.
தியோவின் செயல் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது.
ஆனால் அந்த இரு பெண்களும் அந்தக் காணொளிகளை அழித்தனர்.
பாலர்பள்ளி மாணவர்களால் தங்களுக்காகக் குரல் கொடுக்க முடியாது; அவர்கள் எதிர்நோக்கும் ஆபத்தையும் புரிந்துகொள்ள முடியாது என்று நீதிபது கூறினார்.
அவர்களைப் பாதுகாப்பதும் அவர்களின் சூழல் பாதுகாப்பாய் இருப்பதை உறுதி செய்வதும் கல்வியாளர்களின் தலையாயக் கடமை என்று அவர் தெரிவித்தார்.
கண்காணிப்புக் கேமரா பதிவுகளை அழித்தது அந்த இரு பெண்களின் சுயநலச் செயல் என்றும் நீதிபதி சொன்னார்.
பாதிக்கப்பட்ட சிறாரின் அடையாளத்தைக் காப்பதற்காக அந்த இரு பெண்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.