Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிபர் ஹலிமா அடுத்த வாரம் மலேசியாவுக்கு அதிகாரத்துவப் பயணம்

வாசிப்புநேரம் -
அதிபர் ஹலிமா அடுத்த வாரம் மலேசியாவுக்கு அதிகாரத்துவப் பயணம்

(படம்: Facebook/Halimah Yacob/Ministry of Communications and Information)

அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) அடுத்த வாரம் மலேசியாவுக்கு அதிகாரத்து்வப் பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார்.

மலேசிய மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்தூடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் அழைப்பை ஏற்று அதிபர் ஹலிமா மார்ச் 20 முதல் மார்ச் 22 வரை மலேசியா செல்வதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் மலேசிய மன்னர் சிங்கப்பூருக்கு வருகையளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அதிபர் ஹலிமாவின் இந்தப் பயணம் அமைகிறது.

மலேசியாவில் அதிபர் ஹலிமாவுக்கு இஸ்தானா நெகாராவில் அரச மரியாதையுடன்கூடிய வரவேற்பு நல்கப்படும்.

அதன்பின்னர் அவர் விருந்துபசரிப்பில் கலந்துகொள்வார்.

இஸ்தானாவிலுள்ள முற்றத்தில் அதிபர் ஹலிமா கெலாம் (gelam) செடி ஒன்றையும் நடவிருக்கின்றார். அவரது வருகையைக் கௌரவிக்கும் விதமாகப் புதிய வகை ஆர்க்கிட் மலரொன்றுக்கு அதிபர் ஹலிமா, அவரது கணவரின் பெயரை இணைத்து Vanda Halimah Yacob Mohamed எனப் பெயர் சூட்டப்படும்.

அந்த 3 நாள் பயணத்தின்போது அதிபர் ஹலிமா மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமையும் சந்திப்பார்.

தொழில்முனைவர்களைச் சந்திப்பதுடன் மலேசியாவிலுள்ள வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் விருந்திலும் அதிபர் ஹலிமா பங்கேற்பார்.

அதிபர் ஹலிமா நாட்டில் இல்லாதபோது அதிபர் ஆலோசகர் மன்றத்தின் தலைவர் எடி தியோ (Eddie Teo) அதிபர் அலுவலகத்தின் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்வார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்