Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை" : அதிபர் ஹலிமா யாக்கோப் அறிவிப்பு

வாசிப்புநேரம் -
"அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை" : அதிபர் ஹலிமா யாக்கோப் அறிவிப்பு

Mediacorp

அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) இவ்வாண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இன்று (29 மே) தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் நிற்பதில்லை என முடிவு செய்துவிட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

"கடந்த 6 ஆண்டுகளாகச் சிங்கப்பூரின் 8ஆவது அதிபராகச் சேவையாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். என்னால் முடிந்த அளவிற்கு எனது கடமைகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்துள்ளேன். பரிவான, கருணைமிக்க சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கமாக இருந்தது,"

என அவர் சொன்னார்.

சிங்கப்பூரர்கள் தம்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் அவர்களின் புரிந்துணர்வுக்கும் திருவாட்டி ஹலிமா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சிறப்புமிக்க சிங்கப்பூரை உருவாக்கத் தமக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
 

"இந்த நினைவுகள் எப்போதும் என் மனத்தில் நிலைத்து நிற்கும். என்னால் முடிந்தவரை தொடர்ந்து சிங்கப்பூருக்குச் சேவையாற்றுவேன். எனது கணவருக்கும் குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்,"

என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருவாட்டி ஹலிமா 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அதிபர் பொறுப்பை ஏற்றார்.

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் எனும் பெருமை அவரைச் சேரும்.

அடுத்த அதிபர் தேர்தல் இவ்வாண்டு செப்டம்பர் 13ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும்.

அனைத்து இனத்தவரும் அதில் போட்டியிடலாம்.

2017ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மலாய்ச் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்