Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'அரசியல் தொடர்பற்ற' அதிபரைச் சிங்கப்பூர் விரும்புகிறது: இங் கோக் சொங்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் திரு. இங் கோக் சொங் (Ng Kok Song) தமக்கு அரசியல் ரீதியான தொடர்புகள் இல்லாததை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.

இன்று காலை கேலாங் செராய் சந்தைக்குச் சென்றிருந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

"நமது நிகழ்காலம் கடந்த காலத்துடன் தொடர்புடையது. கடந்த காலத்திலிருந்து அவ்வளவு எளிதில் பிரிந்துவிட முடியாது."

என்று திரு. இங் கூறினார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் திரு. தர்மன் சண்முகரத்தினம் பல ஆண்டுகள் அரசியலில் உள்ளவர் என்பதை அவர் சுட்டினார்.

அமைப்புகளின் நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்கச் சிங்கப்பூருக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாத அதிபர் தேவை என்று அவர் சொன்னார்.

75 வயது திரு. இங் GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி.

63 வயது தொழிலதிபர் திரு. ஜார்ஜ் கோவும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஆதாரம் : CNA/sk(ac)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்