Skip to main content
ஒடிஷாவுக்குச் செல்கிறார் அதிபர் தர்மன்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஒடிஷாவுக்குச் செல்கிறார் அதிபர் தர்மன்

வாசிப்புநேரம் -
அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று ஒடிஷாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

அவர் ஒடிஷாவின் முதலமைச்சர் திரு  மோகன் சரண் மாஜியைச் (Mohan Charan Majhi) சந்திக்கவிருக்கிறார்.

திரு தர்மனுக்கு அதிகாரபூர்வ விருந்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திரு தர்மன் ஜனவரி 17,18 ஆகிய தேதிகளில் ஒடிஷாவில் இருப்பார்.

அங்குச் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழக கல்விச்
சேவைப் பிரிவு (ITEES) ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் ஒடிஷாவில் அமைத்த உலகத் திறன்கள் நிலையத்திற்குத் (World Skills Centre) திரு தர்மன் செல்வார்.

இதற்கு முன்னர் திரு தர்மன் இந்திய அதிபர் திருமதி திரௌபதி முர்முவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் புதுடில்லியில் சந்தித்துப் பேசினார்.

திரு தர்மனும் திருமதி முர்முவும் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மறுவுறுதிப்படுத்தினர்.

இருதரப்பும் பகுதி மின்கடத்தி (semiconductors), பசுமை பொருளியல், மின்னிலக்கப் பொருளியல் போன்றவற்றில் ஒத்துழைக்க வழிகளை ஆராய்கின்றன.

சென்ற ஆண்டு திரு மோடி சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டார். அதுபோக இரண்டாவது முறையாக இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு நடைபெற்றது. அதற்குப் பின்னர் இருநாட்டு உறவு மேலும் வலுவடைந்திருப்பதைத் திரு மோடியும் திரு தர்மனும் ஆதரிப்பதாகத் தெரிவித்தனர்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டு கால உறுதியான உறவின் புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் திரு தர்மன் இந்தியாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்