Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

முதல்முறையாக அதிபருக்கான மரியாதை பீரங்கி முழக்கம் காலாங் பேசினில்

வாசிப்புநேரம் -
முதல்முறையாக அதிபருக்கான மரியாதை பீரங்கி முழக்கம் காலாங் பேசினில்

படம்: Ministry of Defence, Singapore (MINDEF)/Facebook

வெளியீடு : 19 Jul 2026 06:32PM புதுப்பிப்பு : 19 Jul 2026 08:40PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அதிபருக்கான மரியாதை பீரங்கி முழக்கம் இந்த ஆண்டு காலாங் பேசினில் (Kallang Basin) முதல்முறையாக நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி சிங்கப்பூர் அதன் 61ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது.

பத்தாண்டுக்குப் பிறகு தேசிய தின அணிவகுப்பு தேசிய அரங்கில் நடைபெறும்.

ஆக உயரிய ராணுவ மரியாதையுடைய 21 பீரங்கி முழக்கத்தைக் காலாங்கில் மேலும் பலர் பார்த்து ரசிக்கலாம்.

அதிபர் அணிவகுப்பைப் பார்வையிடும் நேரத்தில் பீரங்கி முழக்கமும் இடம்பெறும்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காகப் பீரங்கிகள் அருகிலுள்ள கட்டடங்களிலிருந்து குறைந்தபட்சம் 150 மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும்.

அரங்கத்தின் அமைப்பு பீரங்கிகளின் ஒலியைக் குறைத்துவிடுமோ என்று கவலைப்பட்டதாக தேசிய தின அணிவகுப்பின் அதிபருக்கான மரியாதை பீரங்கி முழக்கம் செய்யும் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

"ஆனால் முதல் ஒத்திகையில் பீரங்கிகள் சுடப்பட்டபோது அந்த ஒலி தெளிவாக ரீங்காரமிட்டது. அவற்றின் எதிரொலிகள் அரங்கம் முழுவதும் பரவின," என்று பெருமையுடன் சொன்னார்.

பீரங்கிகளிலிருந்து வரும் பலத்த சத்தம் குறித்து பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேவைப்பட்டால் காதுகளை அடைக்கும் பஞ்சு இலவசமாக வழங்குவதாகவும் அவர்கள் கூறினர்.

திருத்தம்: இதற்கு முன்பு "அரங்கத்தின் அமைப்பு பீரங்கிகளின் ஒலியைக் குறைத்துவிடுமோ என்று கவலைப்பட்டதாக தேசிய தின அணிவகுப்பின் தலைவர் தெரிவித்தார்" என்று தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்