Skip to main content
"என்னால் முடியும் என்பதையே மாணவர்களுக்குப் புகட்டுகிறேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"என்னால் முடியும் என்பதையே மாணவர்களுக்குப் புகட்டுகிறேன்"-அதிபர் விருது பெற்ற தமிழாசிரியர் உஷா

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அயராமல் உழைத்த  8 கல்வியாளர்கள் அதிபர் விருதைப் பெற்றிருக்கின்றனர். 

318 கல்வி நிலையங்களிலிருந்து 4,700க்கும் மேற்பட்ட நியமனங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

Related article image
(படம்:உஷா கிருஷ்ணசாமி)

விருது பெற்றவர்களில் நார்த் வியூ (North View) தொடக்கப்பள்ளி ஆசிரியர் உஷா கிருஷ்ணசாமியும் ஒருவர்.

"என்னால் முடியும்" என்ற தாரக மந்திரத்தை மாணவர்களுக்குப் புகட்டுவதாகச் சொன்னார் 'செய்தி'யிடம் பேசிய திருவாட்டி உஷா. 

அதற்குச் சான்றாக Down syndrome கொண்ட மாணவிக்கு எளிமையாக நடனப் பயிற்சியளித்து அவரை மேடையேற வைத்தார்.

"வகுப்பறையில் தவறு செய்வது இயல்பு; அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு உணர்த்தத் தவறுவதில்லை," என்கிறார் இந்த ஆசிரியர்.

பலதரப்பட்ட மாணவர்களை நன்கு புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ப பாடத்தை வடிவமைப்பது இன்றைய ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பெரும் சவால் என்றார் அவர்.

மாணவர்கள் பாடத்தை உள்வாங்கி அதனை நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று திருவாட்டி உஷா அறிவுறுத்தினார்.

அதற்குத் தாம் பின்பற்றும் பன்முறை பாங்கு அணுகுமுறையையும் பகிர்ந்துகொண்டார்.

வண்ண மணலில் எழுதுவது, பாடல் வாயிலாகக் கற்பிப்பது உள்ளிட்ட ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் மூலம் தமிழைக் கற்பிப்பதாக அவர் சொன்னார்.

நார்த் வியூ (North View) தொடக்கப்பள்ளி அவரைப் பாராட்டி Facebookஇல் பதிவு வெளியிட்டது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்