Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

விலையை உயர்த்தும் உணவகங்கள்; 'போர் முடிந்தால் மட்டுமே விடியல்’

வாசிப்புநேரம் -

அதிகரித்துள்ள செலவுகளைச் சமாளிக்க உணவு விலையை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இந்திய உணவகங்கள் சில தெரிவித்துள்ளன.

ரஷ்ய-உக்ரேனியப் போர் எங்கோ தொலைவில் நடந்தாலும் அதன் பாதிப்பு உள்ளூரிலும் எதிரொலிக்கிறது…குறிப்பாகப் பணவீக்கம்.

மூலப்பொருள்கள், எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.

அவற்றை நம்பியிருக்கும் உணவகங்கள் திண்டாடுகின்றன.

மூலப்பொருள்கள் மீதான தாக்கம் 

உலகில் தானியவகைகளை ஆகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் உக்ரேனும் அடங்கும்.

இருநாடுகளுக்கு இடையிலான நெருக்கடியால் கோதுமை விலை அதிகரித்துள்ளது. 

மாற்றுப் பொருளாகக் கருதப்படும் அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
 
எண்ணெய் விலைகள்
ரஷ்ய-உக்ரேனியப் பூசலால் உலகளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்சார, எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன. விநியோகச் சேவைகளும் விலையேற்றம் கண்டுள்ளன.

சமையல் எண்ணெயின் பெரும் உற்பத்தியாளராக உக்ரேன் விளங்கும் நிலையில் எண்ணெய் விலையும் ஏறியுள்ளது.

(படம்: Unsplash/chuttersnap)

சவால் மேல் சவால்

கிருமிப்பரவல் சூழலில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள அதிகச் சம்பளம் கொடுக்கவேண்டிய சூழல்.

மலேசியாவின் மோசமான வானிலையால் கடலுணவு இருப்பு பாதிக்கப்பட்டது. தற்போது அதன் விலையிலும் ஏற்றம்.

தீவனங்களின் விலை உயர்வு, பிரேசில், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ஊழியர் பற்றாக்குறை. இரண்டும் சேர்ந்ததால் கோழி இறைச்சி, முட்டை விலையும் அதிகம்தான். 

சவால்கள் ஏற ஏற செலவுகள் அதிகம்.

உணவகங்கள் மீதான தாக்கம்

"எதில்தான் விலையேற்றம் இல்லை? எல்லாவற்றிலும் விலையேற்றம். வாடகைக் கட்டணம், எரிவாயு, மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம், ஊழியர்களின் சம்பளம்...அனைத்திலும்,"

என்கிறார் Gayatri's உணவகத்தின் உரிமையாளர் திரு. சண்முகம்.

<p>Pixabay</p>

இறைச்சி விலை 50 விழுக்காடுவரை அதிகரித்துள்ளதாகவும் எரிவாயுக் கட்டணம் மூன்று மடங்காகியுள்ளதாகவும் Taste of India உணவகத்தின் இயக்குநர் திரு. கார்த்திக் அழகப்பன் தெரிவித்தார்.

"அன்றாடம் புதியதொரு சவால். எவ்வளவுதான் தாங்கமுடியும், எப்படித்தான் சமாளிப்பது என்று தெரியவில்லை,"

என்று Sakunthala's உணவகத்தின் இயக்குநர் மாதவன் சொன்னார்.

'உணவு விலையை உயர்த்தியே ஆகவேண்டிய நிலை'

உணவு விலையை அதிகரித்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உணவகங்கள் கூறின.

வாடிக்கையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படாத வகையில் உணவு விலைகளை ஒட்டுமொத்தமாக மிதமான அளவில் அதிகரித்துள்ளதாகத் திரு. சண்முகம் சொன்னார்.

<p>(படம்: Facebook/&nbsp;<a href="https://www.facebook.com/gayatrirestaurants/?__tn__=-UC*F">Gayatri Restaurant</a>)</p>

குறிப்பிட்ட சில மாமிச உணவுவகைகளின் விலையை மட்டும் சற்று உயர்த்தியுள்ளதாக Grace's Pot உணவகத்தின் இயக்குநர் திரு. சுரேஷ் கூறினார்.

"எண்ணெயின் விலை உயர்வைச் சமாளிக்கப் பொரித்த உணவுவகைகளின் விலையை 2, 3 வெள்ளி வரை உயர்த்தினால்தான் சரியாக இருக்கும். ஆனால் அது வியாபாரத்திற்குக் கட்டுப்படியாகாது. உணவு விலைகளை அதிகரித்தாலும் அவை செலவுகளை ஈடுகட்டவில்லை” என்று திரு. மாதவன் சொன்னார்.

செலவுகளை ஈடுகட்ட மற்ற சில வழிகளையும் நாடியுள்ளதாக உணவகங்கள் தெரிவித்தன.

(கோப்புப் படம்: Fabrizio Bensch)
  • உணவு வீணாவதைத் தவிர்க்க அளவோடு பரிமாறுவது.
    பொதுவாக அதிகக் கழிவுகளை ஏற்படுத்தும் உணவுவகைகள் குறைவான அளவில் பரிமாறப்படுவதாகக் கூறப்பட்டது.
  • இன்னும் மலிவான சிறிய முட்டைகளைப் பயன்படுத்துவது
  • பொட்டல விலைகளைக் குறைக்க மாற்றுவழிகளை நாடுவது.
  • மின்சார, எரிவாயுக் கட்டணத்தைக் குறைக்க, சமையலறையின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது.

இருப்பினும் விலையேற்றம் விலையேற்றம்தான். செலவுகள் குறைந்தால் மட்டுமே வியாபாரத்தில் லாபத்தைப் பார்க்கமுடியும்; 

அதற்குப் போர் ஒரு முடிவுக்கு வருவது அவசியம் என்று உணவகங்கள் கூறின.

இன்னும் சில மாதங்களில் நிலைமை மேம்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக அவை தெரிவித்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்