லாவோஸ் புதிய பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்
(படம்: Lao TV/AFP/Handout)
பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong), லாவோஸ் (Laos) புதிய பிரதமர் சுவோன்சாய் சிபுன்டோனுக்கு (Sonexay Siphandone) வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அதிகாரத்துவப் பயணமாக சிங்கப்பூருக்கு வருகை தரும்படி திரு. லீ அவருக்கு அழைப்பு விடுத்தார்.
எரிசக்தி, மின்னிலக்கம் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ந்து வரும் ஒத்துழைப்பிலும் வலுவான உறவுகளிலும் இரு நாடுகளின் உறவுகள் பின்னிபினைந்திருப்பதாகத் திரு. லீ சொன்னார்.
வட்டார அமைதியையும் செழிப்பையும் ஊக்குவிக்க, ஆசியான் அமைப்பில் Laosஉம் சிங்கப்பூரும் இணைந்து பணியாற்றுவதைப் பிரதமர் லீ சுட்டினார்.
லாவோஸின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவ சிங்கப்பூர் தொடர்ந்து கடப்பாடு தெரிவித்தது.
சிங்கப்பூர் ஒத்துழைப்புத் திட்டத்தின் வழி இரு நாட்டுப் பங்காளித்துவம் தொடர்ந்து வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.