Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டால் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவிடமிருந்து கௌரவ ராணுவப் பதவிகளும் அரச மரியாதைகளும் திரும்பப் பெறப்பட்டன

வாசிப்புநேரம் -
பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டால் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவிடமிருந்து கௌரவ ராணுவப் பதவிகளும் அரச மரியாதைகளும் திரும்பப் பெறப்பட்டன

படம்: John Shys/AFP] (AFP)

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவிடமிருந்து (Andrew) கௌரவ ராணுவப் பதவிகளும் அரச மரியாதைகளும் திரும்பப்பெறப்பட்டுள்ளன.

அவை எலிசபெத் அரசியாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் (Buckingham) அரண்மனை விடுத்த அறிக்கை தெரிவித்தது.  

யார்க் (York) கோமகன் என்றழைக்கப்படும் இளவரசரை அரச குடும்பத்திடமிருந்து தனித்துவைப்பதற்கான முயற்சி அது என்று கருதப்படுகிறது. 

பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டின் பேரில் அவர்  அமெரிக்காவில் வழக்கை எதிர்நோக்கும் வேளையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வழக்கைத் தள்ளுபடி செய்ய இளவரசர் ஆண்ட்ரூ  மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. 

வழக்கைத் தொடரவேண்டும் என்று நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். 

இளவரசர் ஆண்ட்ரூவின் அரச மரியாதைகள் பறிக்கப்பட்டுள்ளதால் இனி அவர் தனிப்பட்ட குடிமகனாகவே வழக்கைச் சந்திக்க வேண்டும். 

அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் இளவரசர் மறுத்துள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa