கைதியிடம் லஞ்சம் வாங்கிய சிறை அதிகாரிமீது குற்றச்சாட்டு
வாசிப்புநேரம் -
(படம்: CNA/Raydza Rahman)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிறைக்கைதியிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகச் சிறை அதிகாரி ஒருவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருள்களைச் சாங்கி சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல லஞ்சம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு கூறுகிறது.
39 வயது முகமது அஸ்ரி அப்துல் ரஹிம் (Mohammad Asri Abd Rahim) , சஞ்சிகைகள், ஆபாசப் படங்கள், மருந்து போன்ற பொருள்களைச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் முகமது யூசோஃப் காசிமிடம் (Mohamad Yusof Kasim) கொண்டு சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
அதற்காக அவர் 3,700 வெள்ளியை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டது.
முகமது அஸ்ரி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் பலமுறை குற்றம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 2022இல் அதுகுறித்துத் தெரியவந்தவுடன் நடவடிக்கை எடுத்ததாக சிங்கப்பூர்ச் சிறைச்சேவை தெரிவித்தது.
விவகாரம் பின்னர் லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆதாரம் : CNA