Skip to main content
பிரித்தம் சிங் மேல்முறையீட்டு வழக்கு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பிரித்தம் சிங் மேல்முறையீட்டு வழக்கு - தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

வாசிப்புநேரம் -
பிரித்தம் சிங் மேல்முறையீட்டு வழக்கு - தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
படம்: CNA
எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கின் (Pritam Singh) மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட திரு பிரித்தம் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை.

நீதிமன்றம் வாதங்களைப் பரிசீலித்துத் தீர்ப்பளிக்கட்டும் என்று அவர் கூறினார்.

தீர்ப்பு வெளிவந்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்று திரு பிரித்தம் குறிப்பிட்டார்.

தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமாபாய், திரு பிரித்தம் ஆரம்பத்தில் இருந்தே ஒரேவிதமாகவே பேசி வந்திருப்பதாகச் சொல்லித் தமது வாதங்களை முன்வைத்தார்.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி லூக் டான் (Luke Tan) சில முக்கிய ஆதாரங்களைக் கவனிக்கத் தவறிவிட்டதாக அவர் கூறினார்.

துணைத் தலைமைச் சட்ட அதிகாரி கோ யிஹான் (Goh Yihan) மேல்முறையீட்டை முற்றாக நிராகரிக்கும்படி நீதிபதியைக் கேட்டுக்கொண்டார்.

இன்றைய மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி ஸ்டீவன் சொங் அரசாங்கத் தரப்புக்கும் தற்காப்புத் தரப்புக்கும் நன்றி சொன்னார்.

தீர்ப்பு பின்னொரு தேதி வெளியிடப்படும், அது பற்றித் தகவல் தரப்படும் என்று அவர் கூறினார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்