நீதிமன்றத்தில் பிரித்தம் சிங்
வாசிப்புநேரம் -
எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங்கின் (Pritam Singh) மேல்முறையீட்டு வழக்கு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.
வழக்கு தொடங்குவதற்குச் சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு திரு பிரித்தம் தமது வழக்கறிஞர்கள் திரு ஆன்ட்ரே ஜுமாபாய் (Andre Jumabhoy), திரு எரிஸ்டோட்டல் (Aristotle Eng) ஆகியோருடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.
தற்காப்பு வழக்கறிஞர் ஜுமாபாய் முதலில் தமது வாதங்களை முன்வைத்துப் பேசினார்.
திரு பிரித்தம் தமது வாக்குமூலங்களில் எப்போதுமே ஒரேவிதமாகப் பேசியதாக அவர் குறிப்பிட்டார். திருவாட்டி ரயிஸா கானும் அவரது உதவியாளர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான வாக்குமூலங்களைத் தந்ததாக அவர் சொன்னார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி லூக் டான் (Luke Tan) சில முக்கிய ஆதாரங்களைக் கவனிக்கத் தவறிவிட்டதாகத் திரு ஜுமோபாய் கூறினார்.
திரு பிரித்தம் தமக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார்.
அவர் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய் சொன்ன இரண்டு குற்றச்சாட்டுகளுக்குத் தண்டனை பெற்றார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு 7,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

ஆதாரம் : CNA